புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் 9 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் 9 பவுன் நகைகள் திருட்டு போனது.
புதுக்கோட்டை
ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 54). இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கடந்த மாதம் 30-ந் தேதி உறவினர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு ஈரோட்டுக்கு செல்வதற்காக புதுக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது கைப்பையில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து பழனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story