9 கொண்டை ஊசி வளைவுகளில் குவிலென்ஸ்கள் சேதம்


9 கொண்டை ஊசி வளைவுகளில்  குவிலென்ஸ்கள் சேதம்
x
தினத்தந்தி 9 Jun 2023 1:15 AM IST (Updated: 9 Jun 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு-வால்பாறை இடையே 9 கொண்டை ஊசி வளைவுகளில் குவிலென்ஸ்கள் சேதம் அடைந்து உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆழியாறு-வால்பாறை இடையே 9 கொண்டை ஊசி வளைவுகளில் குவிலென்ஸ்கள் சேதம் அடைந்து உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

குவிலென்ஸ்கள்

ஆனைமலையை அடுத்த ஆழியாறு, அறிவு திருக்கோவில், வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசித்தவாறு வால்பாறையை நோக்கி செல்லும்போது எதிரே வரும் வாகனத்தை அறிந்து கொள்ளவும், விபத்துகளை தவிர்த்து கொள்ளவும் 40 கொண்டை ஊசி விளைவுகளில் 40 குவிலென்ஸ்கள் நெடுஞ்சாலைத்துறையினரால் அமைக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

முட்புதர்கள்

இந்த நிலையில் 9 கொண்டை ஊசி வளைவுகளில் குவிலென்ஸ்கள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள சாலையில் 9 இடங்களில் குவிலென்ஸ்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் சாலையில் சில இடங்களில் இருபுறங்களிலும் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. மேலும் வனவிலங்குகள் மீது வாகனங்கள் மோதும் நிலை உள்ளது. எனவே முட்புதர்களை அகற்றுவதோடு சேதம் அடைந்த குவிலென்ஸ்களை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story