90 கி.மீ. வேகத்தில் அதிவிரைவு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்


90 கி.மீ. வேகத்தில் அதிவிரைவு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:45 PM GMT)

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி ரெயில் பாதையில் 90 கி.மீ. வேகத்தில் அதிவிரைவு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி அகல ரெயில் பாதை பணி கடந்த மார்ச் மாதம் முடிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதம் 14-ந் தேதியில் இருந்து டெமு ரெயில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியன்பள்ளி வருவதற்கு 45 நிமிடங்கள் ஆகின்ற நிலையில் ரெயிலின் வேகத்தை அதிக படுத்தி நேரத்தை குறைக்கும் வகையில் இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த அதிவேக ரெயில் சோதனை ஓட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் இருந்து அதிவிரைவு ரெயில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இதில் 31 நிமிடத்தில் அந்த ரெயில் அகஸ்தியன்பள்ளிக்கு வந்து சேர்ந்தது. மாலை சரக்கு ரெயில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து தண்டவாளத்தின் உறுதி தன்மை, இரும்பு பாதையின் அதிர்வுகள், விரைவில் தொடங்க உள்ள மின்மயமாக்கல் பணிகள் போன்ற பணிகளுக்காக இந்த ஆய்வு நடைபெற்றதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story