தவறவிட்ட 90 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு


தவறவிட்ட 90 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
x

நீலகிரி மாவட்டத்தில் தவறவிட்ட 90 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில்‌ போலீஸ் சூப்பிரண்டு மற்றும்‌ ௯டுதல்‌ போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சைபர்‌ கிரைம்‌ போலீஸ் நிலையம்‌ செயல்படுகிறது. இங்கு பண மோசடி, ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புதல்‌‌ போன்ற குற்றங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்‌ ராவத்‌ உத்தரவின்‌ பேரில், தவறவிட்ட செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தவறவிட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்‌ கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ்‌, இன்ஸ்பெக்டர் பிலிப்‌ 90 செல்போன்களை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பணம் மோசடி புகார்களில், இதுவரை ரூ.6 லட்சம்‌ பணம்‌ மீட்கப்பட்டு கோர்ட்டு மூலம் பெற்று கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை சைபர் குற்ற 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பொதுமக்களால் தவறவிட்ட மற்றும் திருடு போன ரூ.18 லட்சம் மதிப்புள்ள 90 செல்‌போன்‌கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டது. சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story