90 சதவீதம் பேர் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கின்றனர்


90 சதவீதம் பேர் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கின்றனர்
x

நெகமம் பேரூராட்சியில் 90 சதவீதம் பேர் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கின்றனர் என்று அதிகாரி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

நெகமம்,

நெகமம் பேரூராட்சியில் 90 சதவீதம் பேர் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கின்றனர் என்று அதிகாரி தெரிவித்தார்.

மக்கள் இயக்கம்

நெகமம் பேரூராட்சி சார்பில், தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை நகருக்கான மக்கள் இயக்க தொடக்க விழா நடந்து, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று நெகமத்தில் உள்ள ஒருங்கிணைந்த வளமீட்பு பூங்காவில் தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விளக்கப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து செயல்விளக்கம் அளித்தார். இதில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் நகரை தூய்மையாக வைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பேரூராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து நெகமம் பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா கூறியதாவது:-

தரம் பிரிக்க விழிப்புணர்வு

நெகமம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் இருந்து தினமும் 2½ டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

இதில் 90 சதவீத பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கின்றனர். 100 சதவீதம் பேர் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க, தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வாரத்தில் 2 நாட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பஸ் நிலையம், கடை வீதி உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story