தஞ்சை மாவட்டத்தில் 90.09 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி


தஞ்சை மாவட்டத்தில் 90.09 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
x

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 90.09 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 23-வது இடத்தை பிடித்துள்ளது.

தஞ்சாவூர்


பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 90.09 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 23-வது இடத்தை பிடித்துள்ளது.

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வினை 26 ஆயிரத்து 417 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 12 ஆயிரத்து 262 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 155 பேரும் அடங்குவர். இதில் 23 ஆயிரத்து 798 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 10 ஆயிரத்து 450 பேரும், மாணவிகள் 13 ஆயிரத்து 348 பேரும் அடங்குவர். தேர்ச்சி சதவீதம் 90.09 ஆகும். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 85.22 ஆகும். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.30 ஆகும்.

தஞ்சை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 64.52 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகள் 71.19 சதவீதமும், முழு அரசு உதவி பெறும் பள்ளிகள் 88.74 சதவீதமும், அரசு பள்ளிகள் 84.30 சதவீதமும், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.85 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் (மெட்ரிக்) 96.57 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் (ஸ்டேட் போர்டு) 97.04 சதவீதமும், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

மாநில அளவில் 23-வது இடம்

கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 90.16 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 0.07 சதவீதம் மாணவ, மாணவிகள் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 23-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் 20-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

100 சதவீத தேர்ச்சி

பிளஸ்-1 தேர்வில் 2 அரசு பள்ளிகளும், 22 மெட்ரிக் பள்ளிகளும், சுயநிதி பிரிவு (ஸ்டேட் போர்டு) 6 பள்ளிகளும், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 5, முழு அரசு உதவி பெறும் பள்ளி 1, சமூக நலத்துறை சார்பில் செயல்படும் பள்ளி 1 என மொத்தம் 37 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு 90.29 சதவீதம் பெற்று மாநிலஅளவில் 21-வது இடமும், 2019-ம் ஆண்டு 95.85 சதவீதம் பெற்று மாநிலஅளவில் 17-வது இடமும், 2020-ம் ஆண்டு 97.04 சதவீதம் பெற்று மாநிலஅளவில் 14-வது இடமும், 2021-ம் ஆண்டு 90.16 சதவீதம் பெற்று மாநிலஅளவில் 20-வது இடமும், 2023-ம் ஆண்டு (தற்போது) 90.09 சதவீதம் பெற்று மாநிலஅளவில் 23-வது இடமும் தஞ்சை மாவட்டம் பெற்றுள்ளது.


Next Story