பிளஸ்-2 பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 92.52 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-2 பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 92.52 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x

பிளஸ்-2 பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 92.52 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 283 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பொதுத்தேர்வில் மாணவர்கள் 15,149 பேர், மாணவிகள் 16,767 பேர் என மொத்தம் 31,916 பேர் பொதுத்தேர்வை எழுதினர். இதில் 13,466 மாணவர்கள், 16,062 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 92.52 ஆகும்.

நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுவையொட்டி மாணவ- மாணவிகளின் மனஅழுத்தத்தை போக்க செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் மாவட்ட உளவியல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) எம்.எஸ்.சுகானந்தம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எஸ்.உதயகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜி.குணாளன், உளவியல் ஆலோசகர் எஸ்.சிவகுமார் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும் மாணவ, மாணவிகள் உளவியல் ஆலோசனை பெற 9080858894, 9790585411, 8220738028 என்ற செல்போன் எண்ணில் தொடர்புக்கொள்ளலாம் என மாவட்ட கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story