பிளஸ்-1 பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் 94.93 சதவீதம் தேர்ச்சி


பிளஸ்-1 பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் 94.93 சதவீதம் தேர்ச்சி
x

பிளஸ்-1 பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் 94.93 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அரியலூர்

94.93 சதவீதம் தேர்ச்சி

தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ்-1 எனப்படும் 11-ம் வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வினை 90 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 937 மாணவர்களும், 4 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 300 பேர் எழுதினர்.

இதில் 3 ஆயிரத்து 668 மாணவர்களும், 4 ஆயிரத்து 211 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.93 சதவீத தேர்ச்சி ஆகும். இதில் மாணவர்கள் 93.17 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 96.52 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

8-வது இடத்துக்கு முன்னேற்றம்

கடந்த ஆண்டு பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் அரியலூர் மாவட்டம் 9-வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது மாநில அளவில் ஒரு இடம் முன்னேறி அரியலூர் மாவட்டம் 8-வது இடத்தை பிடித்துள்ளதால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பிளஸ்-1 அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் 92.31 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.


Next Story