சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றம் - அமைச்சர் சேகர்பாபு


சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றம் - அமைச்சர் சேகர்பாபு
x

சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை,

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் பாதிப்பை எங்கேயாவது சென்று எடப்பாடி பழனிசாமி பார்த்தாரா? அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக மழைநீர் தேங்கிய அனைத்து இடங்களிலும், இந்தாண்டு ஒரு சொட்டு கூட மழைநீர் தேங்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி குறை கூறினாலும், எங்களின் பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மத்திய அரசுக்கு பயந்து பயந்து தான் அதிமுக ஆட்சியை நடத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story