பிளஸ்-2 பொதுத்தேர்வில் 96 சதவீத தேர்ச்சி


பிளஸ்-2 பொதுத்தேர்வில் 96 சதவீத தேர்ச்சி
x

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 96 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 96 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, ஆதிதிராவிட நலப்பள்ளி, சுயநிதிபள்ளி, நகராட்சி பள்ளி, மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 78 மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் மொத்தம் 4,559 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். இந்த பொதுத்தேர்வு 31 மையங்களில் நடைபெற்றது.

96 சதவீத தேர்ச்சி

இந்தநிலையில் இன்று காலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 1,873 பேர், மாணவிகள் 2,487 பேர் என மொத்தம் 4,360 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96 சதவீத தேர்ச்சி ஆகும்.

வால்பாறை அருகே அட்டக்கட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மேலும் அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என மொத்தம் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள அந்தந்த பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் இணையதளம் மற்றும் குறுஞ்செய்தியிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 4,813 மாணவ-மாணவிகள் வெற்றி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 86 பள்ளிகளில் படித்த 5,289 மாணவ-மாணவிகள் எழுதினர். வால்பாறை, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில் 39 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இதையடுத்து இன்று வெளியான பொதுத்தேர்வு முடிவு அடிப்படையில், மாணவர்கள் 2,249 பேர், மாணவிகள் 2,564 பேர் என மொத்தம் 4,813 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91 சதவீத தேர்ச்சி ஆகும். வால்பாறை அருகே சின்கோனா அரசு பள்ளி, காடாம்பாறை அரசு பள்ளி, பெத்தநாயக்கனூர் அரசு பள்ளி, வாட்டர் பால்ஸ் எஸ்டேட் அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சியை எட்டியது. அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என மொத்தம் 38 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன.


Next Story