செங்கத்தில் 97.4 மில்லி மீட்டர் மழையளவு
செங்கத்தில் 97.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
செங்கத்தில் 97.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. நள்ளிரவில் தொடங்கிய மழை படி, படியாக குறைந்து அதிகாலை நின்றது. இதேபோல் மாவட்டத்தில் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக செங்கத்தில் 97.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கீழ்பென்னாத்தூர் - 35, சேத்துப்பட்டு - 24.6, தண்டராம்பட்டு மற்றும் போளூர் - 10.2, கலசபாக்கம் - 5, செய்யாறு - 4, திருவண்ணாமலை - 2.3, ஜமுனாமரத்தூர் - 1.3 ஆகும்.