9,11-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


9,11-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

9,11-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கடலூர்

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9, 11 -ம் வகுப்பு படித்து வரும் 3093 மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத்தேர்வு முகமையால் 29.9.2023 அன்று நடத்தப்பட இருந்த நுழைவுத்தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேற்படி எழுத்துத்தேர்வானது, காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

60 சதவீத மதிப்பெண்கள்

மேலும், 8 மற்றும் 10 -ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தவிர இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய தேசிய உதவித்தொகை போர்டல் (http://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தை (http://socialjustice.gov.in) தொடர்ந்து பார்த்து, கல்வி உதவித்தொகை பயன்களை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story