10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x

10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்த ஒக்கரை கைகாட்டி பகுதியில் உள்ள சாலையோரம் மலைப்பாம்பு கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், உப்பிலியபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய பொறுப்பாளர் சங்கப்பிள்ளை தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த மலைப்பாம்பு இரையை விழுங்கிய நிலையில் இடத்தை விட்டு நகராமல் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மலைப்பாம்பு துறையூர் வனச்சரகர் பொன்னுசாமியிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பச்சைமலை காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.


Next Story