சோளக்காட்டில் 10 அடி நீள மலைப்பாம்பு
சோளக்காட்டில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்த பாலுசாமி என்பவருக்கு சொந்தமான சோள காட்டில் நேற்று மாலை சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மலைப்பாம்பினை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர். ஏற்கனவே நேற்று முன்தினம் ஆலம்பாடி பெரிய ஏரியில் உயிருடன் மலைப்பாம்பு தீயணைப்பு வீரர்களால் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story