வான்கோழியை விழுங்க முயன்ற 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது


வான்கோழியை விழுங்க முயன்ற 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
x

வான்கோழியை விழுங்க முயன்ற 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூர் குறிச்சிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயந்த். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் வான்கோழி, ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தோட்டத்தில் நேற்று காலை வான்கோழி கத்தும் சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. இதனைக்கண்ட ஜெயந்த் தோட்டத்திற்குள் சென்று பார்த்தபோது அங்கு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று வான்கோழியை விழுங்க முயற்சித்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசனிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு நார்த்தாமலை காப்புக்காட்டில் பத்திரமாக கொண்டு விடப்பட்டது.

1 More update

Next Story