10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மனு கொடுக்கும் போராட்டம்
புதூர் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை
அரக்கோணத்தை அடுத்த புதூர் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருந்து அரக்கோணம் உதவி கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் அருந்ததியர், ஆதிதிராவிடர் மக்கள் நடந்தே சென்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். பின்னர், உதவி கலெக்டர் பாத்திமாவிடம் மனு கொடுத்தனர். மனுவில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பகுதியில் 3.83 சென்ட் நிலத்தில் 103 வீட்டுமனைகளை வேற்று சமுதாயத்தினருக்கு பணம் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கி உள்ளனர். அதனை ரத்து செய்து பல ஆண்டு காலமாக வாழும் தங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
Related Tags :
Next Story