பந்தலூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் கைது
பந்தலூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் கைது செய்யப்பட்டார்.
பந்தலூர்
பந்தலூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் கைது செய்யப்பட்டார்.
10 வயது சிறுமி
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (வயது 70). இவர் அந்தப்பகுதியில் மளிகைக்கடை வைத்து உள்ளார். இவரின் கடைக்கு அதேப்பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அடிக்கடி பொருட்கள் மற்றும் மிட்டாய்கள் வாங்க வந்து உள்ளாள். இதனால் அந்த சிறுமியுடம் குருநாதன் அடிக்கடி பேசி வந்து உள்ளார். இந்தநிலையில் நேற்றும் அதே போல் கடைக்கு அந்த சிறுமி வந்தார்.
பாலியல் தொல்லை
அப்போது அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுத்து கடைக்குள் அழைத்தார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார். இதன்காரணமாக அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதையடுத்து குருநாதன் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனா.
பெற்றோர் இதுகுறித்து தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா (பொறுப்பு) வழக்குப்பதிவு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குருநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
10 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.