சூறாவளி காற்றினால் 100 ஆண்டு பழமை வாய்ந்த மரம் முறிந்தது


சூறாவளி காற்றினால் 100 ஆண்டு பழமை வாய்ந்த மரம் முறிந்தது
x

நரிக்குடி அருகே சூறாவளி காற்றினால் 100 ஆண்டு பழமை வாய்ந்த மரம் முறிந்தது

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே மறையூர் கிராமம் பஸ்நிறுத்தம் அருகே நரிக்குடி - பார்த்திபனூர் சாலையில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இச்சி மரம் இருந்தது. இந்த மரத்தின் நிழலில் மறையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக செல்பவர்கள் இளைப்பாறுவது வழக்கம். இந்தநிலையில் அந்த பகுதியில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இந்த காற்றினால் இச்சி மரம் சாலையின் நடுவே முறிந்து விழுந்தது. இதனால் 1 மணி நேரம் நரிக்குடி - பார்த்திபனூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலையின் நடுவே முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணி நடைபெற்றது. பின்னர் போக்குவரத்து சீரானது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் முறிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story