வைக்கோல் போரில் இருந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


வைக்கோல் போரில் இருந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x

வைக்கோல் போரில் இருந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே பொம்மாடிமலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்த வைக்கோல் போரில் மலைப்பாம்பு உள்ளதாக, அப்பகுதி மக்கள் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சின்னக்கண்ணு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மலைப்பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்பு வைக்கோல் போரில் இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் அந்த மலைப்பாம்பை விட்டனர்.

1 More update

Next Story