கழிவறைக்கு வெட்டிய குழியில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


கழிவறைக்கு வெட்டிய குழியில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x

இலுப்பூர் அருகே கழிவறைக்கு வெட்டிய குழியில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல். இவர் வீட்டிற்கு அருகே கழிவறைக்காக குழி ஒன்று வெட்டியுள்ளார். நேற்று காலை பழனிவேல் அங்கு சென்று பார்த்தபோது அந்த குழிக்குள் மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு 12 அடி நீளமும், 25 கிலோ எடையும் இருந்தது. பின்னர் தீயணைப்பு துறையினர் அந்த மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்பு அந்த மலைப்பாம்பு நார்த்தாமலை காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது.


Next Story