கண்மாயில் சிலை இருக்கிறது என 15 அடி பள்ளம் தோண்டியவரால் பரபரப்பு


கண்மாயில் சிலை இருக்கிறது என 15 அடி பள்ளம் தோண்டியவரால் பரபரப்பு
x

கண்மாயில் சிலை இருக்கிறது என 15 அடி பள்ளம் தோண்டியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் கண்மாய் பகுதியில் மண்ணுக்கு அடியில் பழமையான பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை இருப்பதாக சாமி கனவில் வந்து கூறியதாக ஊர் மக்களிடம் கூறினார். இதையடுத்து அந்த இடத்தில் சாமி சிலைகளை எடுப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் 15 அடி ஆழத்திற்கும் மேலாக பள்ளம் தோண்டி வந்தனர். ஆனால் அந்த இடத்தில் சிலை இல்லை. இதையடுத்து அருகில் உள்ள இடத்திலும் தோண்ட ஆரம்பித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரியாபட்டி வருவாய்த்துறை மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்த பகுதியில் தோண்ட அனுமதி இல்லை என கூறி பள்ளத்தை மூடினர். அத்துடன் அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தனர். சிலையை பார்ப்பதற்காக கூடிய மக்கள் சிலை இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story