15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை


15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 22 Aug 2023 1:15 AM IST (Updated: 22 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்
கோவை


கோவை பழையூர் பகுதியை சேர்ந்த 41 வயது தொழிலாளி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் 39 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர். அந்த பெண்ணுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார்.

அந்த சிறுமி தனது தாயின் பராமரிப்பில் இருந்தார். தாய் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அவருடைய வளர்ப்பு தந்தையான 41 வயது தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது பல நாட்கள் தொடர்ந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்கு 15 வயது சிறுமிக்கு வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது பற்றி சிறுமி தனது தாயிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.



Next Story