150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிந்தது


150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 25 Oct 2022 6:45 PM GMT (Updated: 25 Oct 2022 6:46 PM GMT)

செஞ்சி அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிந்தது

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சி-திண்டிவனம் சாலையில் வடவானூர் பஸ் நிறுத்தம் அருகே சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த காட்டுவாகை மரம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த மரத்தில் இருந்து புகை வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களில் மரம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது லேசான காற்று வீசியதால் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த செஞ்சி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் மரம் முழுவதும் எரியாமல் காப்பாற்றப்பட்டது. மர்ம நபர்கள் யாரேனும் தீப்பற்றக் கூடிய ரசாயன பொருட்கள் அல்லது பட்டாசுகளை மரத்தில் போட்டு சென்று இருக்கலாம். அதன் மூலம் மரம் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story