16 வயது சிறுமி பலாத்காரம்


16 வயது சிறுமி பலாத்காரம்
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

கோவை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

16 வயது சிறுமி

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தாஸ் (வயது 30). தொழிலாளி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியும் தனது கிராமத்தை சேர்ந்தவர் தானே என்று நினைதது தாசிடம் சகஜமாக பேசி வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சிறுமி வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தாஸ், உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறிஉள்ளார். அவர் ஏற்கனவே பழக்கம் ஆனவர் என்பதால் சிறுமி நம்பி சென்று உள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தாஸ், அந்த சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

போலீஸ் வலைவீச்சு

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென்று வயிறு வலி ஏற்பட்டது. இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். உடனே அவர்கள் அந்த சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறுித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் அந்த சிறுமி மற்றும் அவருடைய பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதில் சோமனூரை சேர்ந்த தாஸ் என்பவர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனால் அந்த சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த தாஸ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story