17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை


17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
x

கொல்லிமலையில் பெற்றோர் பிரிந்து வாழ்ந்ததால் மனவேதனை அடைந்த 17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

பெற்றோர் பிரிந்தனர்

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் குண்டூர் நாடு இலங்கியம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாலாமணி. இவர்களுக்கு 2 மகன்களும், ரேணுகா (17) என்ற மகளும் இருந்தனர். பழனிசாமிக்கும், இவரது மனைவி பாலாமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதை ஏற்காத அவரது மகள் ரேணுகா, பெற்றோரை சேர்ந்து வாழ பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இருவரும் மகள் பேச்சை கேட்காமல் கொல்லிமலை அடிவார பகுதியான நடுக்கோம்பையில் பழனிசாமியும், எருமப்பட்டி பகுதியில் பாலாமணியும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

தற்கொலை

இதனால் ரேணுகா மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் இவர் வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ரேணுகாவை காப்பாற்றி சிகிச்சைக்காக செம்மேடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கொல்லிமலை வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பெற்றோர் பிரிந்து வாழ்ந்ததால் மனவேதனை அடைந்த 17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொல்லிமலையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story