17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை
கோவை அருகே 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
துடியலூர்
கோவை அருகே 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
17 வயது சிறுமி
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி டிப்ளமோ படித்து வருகிறார். இவருடைய தந்தை 15 ஆண்டுக ளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவருடைய தாயார், பெயிண்டர் ஒருவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு சிறுமி தனது தாயார் மற்றும் வளர்ப்பு தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு சென்ற நிலையில் மாணவியின் மீது வளர்ப்பு தந்தையான பெயிண்டருக்கு சபலம் ஏற்பட்டது.
பாலியல் தொல்லை
இதனால் அவர், மனைவி வெளியே சென்ற நேரத்தில் வளர்ப்பு மகள் என்பதை மறந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன அந்த மாணவி, வெளியே சொல்லாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் மாணவியின் தாயாரும், அவரது 2-வது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவருடைய 2-வது கணவர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
போக்சோவில் கைது
இந்த நிலையில், மாணவி தனக்கு வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தனது தாயாரிடம் கூறி அழுதார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பெயிண்டரை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.