மூதாட்டியிடம் 2½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 2½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

மூதாட்டியிடம் 2½ பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

திருச்சி

துவரங்குறிச்சி அருகே உள்ள அடைக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 60). இவர் நேற்று அக்கியம்பட்டி கிராமத்தில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துவரங்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ்சில் பின்புறம் உள்ள படிக்கட்டு வழியாக ஏறும்போது, அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை யாரோ பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.


Next Story