புள்ளிமானை உயிருடன் விழுங்கிய 20 அடி நீள மலைப்பாம்பு


புள்ளிமானை உயிருடன் 20 அடி நீள மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது.

வேலூர்

அணைக்கட்டு

புள்ளிமானை உயிருடன் 20 அடி நீள மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது.

ஒடுகத்தூரை அடுத்த பெரியஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு. இவர் தனது விவசாய நிலம் அருகே ஒரு கொட்டகை அமைத்துள்ளார். நேற்று காலை கொட்டகையில் இருந்த கால்நடைகள் மிரண்டு சத்தம் போட்டன. சந்துரு கொட்டகைக்கு ஓடி வந்து பார்த்தபோது, 20 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஏதோ இரையை விழுங்கி விட்டு அங்கிருந்து நகர முடியாமல் தவித்தது. இதைப் பார்த்த அவர் தீயணைப்பு நிலையத்துக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் மலைப் பாம்பு விழுங்கிய இரையை வெளியே கக்கியதில், அது ஒரு புள்ளி மான் எனத் தெரிய வந்தது. அந்தப் புள்ளிமானை மலைப்பாம்பு உயிருடன் விழுங்கி இருக்கலாம், எனத் தெரிகிறது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் இறந்த புள்ளிமானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பின் உடலை எரித்து அடக்கம் செய்தனர். மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள கருத்தமலை காப்புக்காட்டில் விட்டனர்.

1 More update

Next Story