பஸ் பயணியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


பஸ் பயணியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x

பஸ் பயணியிடம் 3 பவுன் சங்கிலி பறித்த பெண் கைது செய்யப்பட்டார்

தஞ்சாவூர்

தஞ்சை நாவலர் நகர் பகுதியை சேர்ந்த சூசை அருள் என்பவரது மனைவி ஜெயரோஸ் (வயது 52). இவர் தஞ்சை மேரிஸ் கார்னரில் இருந்து புதிய பஸ்நிலையம் நோக்கி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். வினோதகன் ஆஸ்பத்திரி பஸ்நிறுத்தம் அருகே பஸ் சென்ற போது அவருடைய கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயரோஸ், இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போதுமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை முடிச்சூர் சாலையை சேர்ந்த ரவி மனைவி ராதா (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story