தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை சாவு
காரிமங்கலம்:-
காரிமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை இறந்தது.
3 வயது குழந்தை
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பூமாண்டஅள்ளி ஊராட்சி மொட்டையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு 3 வயதில் திவ்யஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று காலை கணவன்- மனைவி இருவரும் குழந்தையை வீட்டின் அருகில் உள்ள உறவினர்களிடம் பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு வெளியில் சென்று உள்ளனர்.
வீட்டின் அருகில் விளையாடி கொண்டு இருந்த குழந்தை திடீரென காணவில்லை. இதனால் உறவினர்கள் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது குழந்தை வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் குழந்தையை மீட்டனர். அப்போது குழந்தை இறந்து விட்டது தெரியவந்தது.
சோகம்
குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் அருகில் விளையாடிக்ெகாண்டு இருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.