தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 12 July 2023 12:24 AM IST (Updated: 12 July 2023 4:30 PM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து 3 வயது குழந்தை பலியானது.

சேலம்

ஓமலூர்

3 வயது குழந்தை

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டி ஊராட்சி வேலகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயநாதன் (வயது 32). இவர் கிரானைட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நதியா. இவர்களுக்கு ஹரிஷ் (3) என்ற மகனும், 6 மாதத்தில் பெண் குழந்தையும் இருந்தன.

இந்த நிலையில் நதியா வீட்டின் முன்புள்ள தொட்டியை திறந்து தண்ணீர் எடுத்து துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது தொட்டியின் அருகில் விளையாடி கொண்டிருந்த குழந்தை ஹரிஷ் எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதனிடையே தண்ணீர் தொட்டியில் குழந்தை விழும் சத்தம் கேட்டு தொட்டி இருந்த இடத்திற்கு நதியா ஓடிவந்தார்.

சாவு

அய்ேயா குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விட்டதே என்று அவர் கதறி அழுதபடி தொட்டியில் விழுந்த குழந்தையை மீட்க முயன்றார். இதனிடையே சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் தொட்டியில் உள்ள தண்ணீருக்குள் விழுந்த குழந்தையை எடுத்து ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இறந்த குழந்தையை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. தாய் கண் எதிரே குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து இறந்த இந்த சோக சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story