3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு விளையாட செல்வது வழக்கம். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு சிறுமி விளையாட சென்றாள். அப்போது வீட்டில் இருந்த சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி வீட்டிற்கு வந்ததும் பெற்றோரிடம் கூறினாள். இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் . மேலும் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் சிறுவனை போலீசார் அடைத்தனர்.