கள்ளக்குறிச்சி மணிமேகலைகுமார் ஆஸ்பத்திரியில் பெண்ணின் வயிற்றில் இருந்த 4½ கிலோ கட்டி அகற்றம்


கள்ளக்குறிச்சி மணிமேகலைகுமார் ஆஸ்பத்திரியில் பெண்ணின் வயிற்றில் இருந்த 4½ கிலோ கட்டி அகற்றம்
x

கள்ளக்குறிச்சி மணிமேகலைகுமார் ஆஸ்பத்திரியில் பெண்ணின் வயிற்றில் இருந்த 4½ கிலோ கட்டி அகற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதுடைய பெண். இவர் கடந்த 5 மாதங்களாக வயிற்று வலி மற்றும் சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள மணிமேகலைகுமார் ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் சென்று சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் மூலம் முழு உடல் பரிசோதனை செய்தபோது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இ்தையடுத்து அந்த பெண்ணிற்கு ஆஸ்பத்திாியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிமேகலைகுமார் தலைமையில், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ரவிவர்மா (52), மயக்கவியல் டாக்டர் சரத்பாபு ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் 32 சென்டி மீட்டர் அளவில் இருந்த 4½ கிலோ கட்டியை அகற்றினர். அந்த கட்டி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த ஒரு வாரத்திற்கு பிறகு அந்த பெண் நலமுடன் வீடு திரும்பியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story