மன வேதனையில் இருந்த 4 மாத கர்ப்பிணி... திடீரென எடுத்த விபரீத முடிவு


மன வேதனையில் இருந்த 4 மாத கர்ப்பிணி... திடீரென எடுத்த விபரீத முடிவு
x

தாயார் மீனா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மீனா. இவர்களது 2-வது மகள் நந்தினி (வயது21). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்தார். அப்போது நந்தினிக்கும், ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இந்த தகவல் அறிந்ததும் இவர்களை இருவீட்டினரும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் ராஜபாளையம் இ.எஸ்.ஐ. காலனியில் வசித்தனர். இவர்களுடன் குருநாதனின் தாயாரும் வசித்தார். தற்போது நந்தினி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை, மாமியார் காஞ்சனா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது தாயாரிடம் மன வேதனையுடன் கூறி உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நந்தினியின் தாயார் மீனா கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story