குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் சாவு


குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் சாவு
x

குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் 30-வது தெருவைச் சேர்ந்தவர் டெல்லி ராஜா. கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கவுதம் (வயது 4).

நேற்று இரவு கவுதம் தனது வீட்டின் வாசலில் நின்று விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியில் குதிரைகள் மேய்ச்சலுக்காக நடந்து சென்றன. சிறுவன் கவுதம், ஒரு குதிரையின் வாலை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.

குதிரை எட்டி உதைத்து சாவு

இதில் அந்த குதிரை கவுதமை எட்டி உதைத்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் கவுதம் பரிதாபமாக இறந்துவிட்டான்.

தங்கள் மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story