மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி 4 வயது பெண் குழந்தை பலி


மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி 4 வயது பெண் குழந்தை பலி
x

கலசபாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் மீது டிராக்டர் மோதி 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் மீது டிராக்டர் மோதி 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

டிராக்டர் மோதியது

துரிஞ்சாபுரம் ஒன்றியம் மேட்டு கார்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சர்வேந்திரன் (வயது 35), விவசாயி. இவரது மனைவி சத்யா. இவர்களின் மகள் கவின் மித்ரா (4).

இந்த நிலையில் நேற்று மாலை சர்வேந்திரன், சத்யா, கவின் மித்ரா ஆகியோர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நாயுடுமங்கலம் நோக்கி ஆர்ப்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

கலசபாக்கத்தை அடுத்த கமலப்புத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பெண் குழந்தை பலி

இதில் மோட்டார் சைக்கிளின் முன்புறத்தில் அமர்ந்து வந்த கவின் மித்ரா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தாள். மேலும் மோட்டார் சைக்கிளுடன் சர்வேந்திரன், சத்யா கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

உடனடியாக கவின் மித்ராவை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தாள்.

இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story