4 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல்


4 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல்
x

4 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல்

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே செல்லியகவுண்டன்புதூரில் 4 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதையடுத்து இன்று பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அவளது பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து செல்லியக்கவுண்டன்புதூரில் சுல்தான்பேட்டை வட்டார சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் கொசு ஒழிப்பு பணிமேற்கொள்ளப்பட்டது.


Next Story