விற்பனைக்காக வந்திருந்த 45 கிலோ ராட்சத திருக்கை மீன்
கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக 45 கிலோ ராட்சத திருக்கை மீன் வந்திருந்தது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. அதேபோன்று இங்கிருந்து மீன்களும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. இங்கு அரிய வகை மீன்களும், ராட்சத மீன்களும் விற்பனைக்கு வருகிறது. இன்று கோட்டைப்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய 45 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. இந்த திருக்கை மீன் ரூ.15 ஆயிரத்திற்கு விலை போனது. இந்த மீனை மீன் வியாபாரி ஒருவர் ஏலம் எடுத்தார். இந்த மீன் ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையாகிறது. இந்த மீன் மருத்துவ குணம் வாய்ந்தது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த ராட்சத திருக்கை மீனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story