குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்து குடித்த 5 வயது சிறுவன் பலி


குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்து குடித்த 5 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குளிர்பானம் என்று நினைத்து பூச்சி மருந்து குடித்த 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தா

கோயம்புத்தூர்

குளிர்பானம் என்று நினைத்து பூச்சி மருந்து குடித்த 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

தனியார் நிறுவன ஊழியர்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையம் திலகர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரு டைய மகன் தர்ஷித் (5).

பிரகாசும், அவருடைய மனைவியும் வேலைக்கு செல்வதால் தர்ஷித்தை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்து விட்டனர்.

சம்பவத்தன்று அங்கன்வாடி மையத்தில் இருந்து வீட்டிற்கு வந்த தர்ஷித் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவன், வீட்டில் ஒரு பாட்டிலில் இருந்த பூச்சிமருந்தை, குளிர்பானம் என்று நினைத்து குடித்தான்.

சிறிது நேரம் கழித்து அந்த சிறுவ னுக்கு வயிறு வலி ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த தர்ஷித், வீட்டிற்கு வந்த தனது தந்தை பிரகாஷிடம் வயிறு வலிப்பதாக கூறி உள்ளான்.

பரிதாப சாவு

உடனே அவர், தர்ஷித்திடம் என்ன குடித்தாய் என்று விசாரித்த போது குளிர்பானம் குடித்ததாக கூறி உள்ளான். மேலும் தான் குடித்த குளிர்பான பாட்டிலை காண்பித்து உள்ளான்.

அந்த பாட்டிலை பார்த்த போது அது வீட்டில் கரப்பான் பூச்சியை கொல்வதற்காக வைத்திருந்த பூச்சி மருந்து என்பதும், அதை குளிர்பானம் என நினைத்து சிறுவன் குடித்ததும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தர்ஷித்தை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தர்ஷித் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story