ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 50 ஆண்டுகள் பழமையான மரம் முறிந்து விழுந்தது


ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 50 ஆண்டுகள் பழமையான மரம் முறிந்து விழுந்தது
x

சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 50 ஆண்டுகள் பழமையான மாமரம் முறிந்து விழுந்தது.

சென்னை

சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சமையல் செய்யும் கூடத்துக்கு அருகே அமரர் அறைக்கு பின்புறம் 50 ஆண்டுகள் பழமையான மாமரம் ஒன்று இருந்தது.

நேற்று காலை அந்த மரத்தின் ஒரு பக்க கிளை திடீரென பலத்த சத்தத்துடன் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ஆஸ்பத்திரி ஊழியர்கள், நோயாளிகள் யாரும் அங்கு இல்லாததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிகாலை 3 மணி அளவில் இருந்தே அந்த மரத்தின் கிளை காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பலமாக ஆடிக்கொண்டிருந்ததாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர். முறிந்து விழுந்த மரக்கிளையை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story