மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி


மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 2:20 PM IST)
t-max-icont-min-icon

கவுண்டம்பாளையம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலியானார். அந்த பகுதியில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோயம்புத்தூர்

கவுண்டம்பாளையம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலியானார். அந்த பகுதியில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மர்ம காய்ச்சல்

கோவை கவுண்டம்பாளையம் அருகே மூவர்நகரை சேர்ந்தவர் கணேசன்மூர்த்தி. இவருடைய மகள் அனுசியா ஸ்ரீ (வயது 6). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 1 -ம் வகுப்பு படித்து வந்தார். அனுசியா ஸ்ரீ கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரை பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமியின் உடல் நிலை திடீரென்று மோசமடைந்தது. உடனே அவரை பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையாக சேர்த்தனர்.

சிறுமி சாவு

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். உடனடியாக அந்த சிறுமியை பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனுசுயா ஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மருத்துவ குழு அறிவுரை

இது குறித்து தகவல் அறிந்த சுகாதார துறையினர், காய்ச்சலால் இறந்த சிறுமி வசித்த பகுதிக்கு சென்றனர். அங்கு வேறு யாரா வது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என்று பரிசோத னை மற்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் காய்ச்சல் காரணமாக அந்த பகுதியில் உள்ள மருத்துவம னைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்களை சேகரித் தனர். யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவ துறையினர் அறிவுறுத்தினர்.


Next Story