6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
கோவை
கட்டிட வேலை செய்யும் தாயுடன் தங்கி இருந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசில் கூறியதாவது:-
கட்டிட வேலை
கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் பேவரிஹில்ஸ் வளாகத்தில் 200-க்கும் மேலான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் கட்டிட தொழிலாளர்கள் ஆண், பெண் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்கள். இதில் கட்டிட பெண் தொழிலாளி, தன்னுடைய 6 வயது பெண் குழந்தையுடன் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வந்தார். அப்போது 27 வயது வாலிபரான சக கட்டிட தொழிலாளி ஒருவர், அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுகொடுத்து பழகி வந்துள்ளார்.
பாலியல் பலாத்காரம்
இந்த நிலையில் அந்த சிறுமியின் தாய் இல்லாதபோது, 6 வயது சிறுமியை கட்டிட தொழிலாளி பாலியல்பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நடந்த சம்பவத்தை தாயிடம் கூறி அழுதுள்ளாள். இதுகுறித்து சிறுமியின் தாய் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தப்பி ஓட்டம்
கோவை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி இதுகுறித்து விசாரித்து, கட்டிடதொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். இதற்கிடையில் அந்த தொழிலாளி தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள். சிறுமி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.