வாடிப்பட்டி அருகே 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை


வாடிப்பட்டி அருகே  6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
x

வாடிப்பட்டி அருகே 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டான்.

மதுரை

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம். விவசாயி. இவருடைய மனைவி ராமாயி. இவர்களுக்கு திவ்யதர்ஷினி என்ற மகளும், விக்னேஷ் (வயது 11) என்ற மகனும் உள்ளனர். திவ்யதர்ஷினி 12-ம் வகுப்பும், விக்னேஷ் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் திவ்யதர்ஷினிக்கு ராஜாங்கம் புது செருப்பு வாங்கி கொடுத்ததாகவும், தனக்கு வாங்கி தரவில்லை என்று விக்னேஷ் கோபித்து கொண்டு வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே விக்னேஷ் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story