தேவாலா அருகே தடுப்பணையில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி-நண்பர்களுடன் குளிக்கச்சென்ற போது பரிதாபம்


தினத்தந்தி 9 Jun 2023 7:00 AM IST (Updated: 9 Jun 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

தேவாலா அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது தடுப்பணையில் மூழ்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.

நீலகிரி

கூடலூர்

தேவாலா அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது தடுப்பணையில் மூழ்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.

தடுப்பணையில் மூழ்கினான்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அட்டி ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கோபால். இவரது மகன் நிஷாந்த் (வயது 7). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நிஷாந்த் வீட்டில் இருந்தான்.

நேற்று மாலை 3 மணி அளவில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். பின்னர் நெல்லிக்கண்டி என்ற இடத்தில் ஆற்றுவாய்க்கால் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றான். அப்போது நிஷாந்த் தண்ணீரில் முழ்கினான். தொடர்ந்து சேற்றில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நிஷாந்தால் வெளியே வர முடிய வில்லை.

சிறுவன் பலி

இதைக்கண்ட மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். பின்னர் தடுப்பணையில் இறங்கி தேடினர். அப்போது சேற்றில் சிக்கியவாறு நிஷாந்த் பரிதாபமாக பலியானது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தேவாலா போலீசார் அங்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் பலியான சம்பவத்தால் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடுப்பணையில் மூழ்கி சிறுவன் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story