டிராக்டர் மோதி 9 வயது சிறுமி சாவு
டிராக்டர் மோதி 9 வயது சிறுமி சாவு
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் கரட்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் சையது முஸ்தபா (வயது 43). இவர் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஷிபாநதீரா (9). நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு மேட்டுப்பாளையம் -அன்னூர் ரோடு டேங்க்மேடு எதிரில் உள்ள கருப்பராயன் கோவில் போகும் வழியில் மோட்டார் சைக்கிளில் சையது முஸ்தபா தனது மகளுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை கடந்து செல்ல முயற்சிக்கும்போது டிராக்டர் மோதியதால் மண்சறுக்கி கீழே விழுந்தனர். இதில் சிறுமி ஷிபாநதீரா படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.