90 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை


90 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக வசித்த 90 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கோவை ராமநாதபுரம் அருகே குணசுந்தரி நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 90). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த தனலட்சுமி வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று முன்தினம் மாலை மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் தீ பரவி தனலட்சுமியின் உடல் முழுவதும் பரவி எரிந்தது.

இதனால் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்ட தனலட்சுமியை அக்கம், பக்கத்தினர் மீட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்த போது தனலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story