மறைமலைநகர் அருகே 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


மறைமலைநகர் அருகே 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மறைமலைநகர் அருகே 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் டி.என்.எச்.பி. குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் எழில்குமரன் (வயது 14). காட்டாங்கொளத்தூரில் உள்ள மங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை எழில்குமரனை அவரது தாயார் டியூஷனுக்கு போகும்படி கூறிவிட்டு வீட்டுக்கு பின்னால் துணி துவைத்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் வந்து பார்த்த போது தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு எழில் குமரன் ஏறகனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story