சொந்த வீட்டிலேயே 52 பவுன் நகையை திருடிய 9-ம் வகுப்பு மாணவன்
நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக சொந்த வீட்டிலேயே 52 பவுன் நகையை 9-ம் வகுப்பு மாணவன் திருடினான்.
நாகமலைபுதுக்கோட்டை,
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள பல்கலை நகரைச் சேர்ந்த 48 வயதான நபர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டிலிருந்த 52½ பவுன் நகைகளை காணவில்லை என நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசாரின் விசாரணையில் புகார் கொடுத்தவரின் 14 வயது மகனான 9-ம் வகுப்பு மாணவன், தனது சொந்த வீட்டிலேயே திருடியதும், அவற்றை தனது பள்ளி நண்பர்கள் இருவருடன் சேர்ந்து விற்று அந்த பணத்தில் பள்ளி ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் ஜாலியாக ஊர், ஊராக சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து 3 மாணவர்கள் மீதும் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மாணவர்கள் 3 பேரும் நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.