பிறந்து சில நாட்களே ஆன குழந்தையைவிட்டுச்சென்ற இளம்பெண்


பிறந்து சில நாட்களே ஆன குழந்தையைவிட்டுச்சென்ற இளம்பெண்
x

வேலூர் பெண்ட்லேண்ட் மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை விட்டுச்சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

குழந்தை அழுகுரல்

வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு பகுதியில் இருந்து நேற்று மாலை இடைவிடாமல் குழந்தை ஒன்று அழும் குரல் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சிலமணி நேரமே ஆன குழந்தை மேஜை மீது தனியாக விடப்பட்டிருந்தது.

அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் பணியாளர்கள் குழந்தையை மீட்டு, தாயார் குறித்து விசாரணை நடத்தினர். சிலமணி நேரத்துக்கு பின்னரும் குழந்தையை தேடி யாரும் வரவில்லை. விசாரணையில் அந்த குழந்தையை ஒரு பெண் விட்டுச்சென்றது அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தெற்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இதபற்றி போலீசார் கூறுகையில், மருத்துவமனைக்கு ஒரு இளம் பெண் குழந்தையுடன் வந்துள்ளார். அவர் அங்கிருந்தவர்களிடம் தான் கையில் வைத்திருந்த குழந்தை, தன் குழந்தை என்றும் மஞ்சள்காமாலை நோய் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அங்கிருந்த மற்ற நோயாளிகள் எதேச்சையாக அந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளனர். குழந்தையை விட்டுவிட்டு அந்த பெண் சென்று விட்டார். அவரது புகைப்படத்தை வைத்து, அந்த பெண் குழந்தையின் தாயா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.


Next Story