கோத்தகிரியில் வீட்டு படிக்கட்டில் விளையாடிய கரடி-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


கோத்தகிரியில் வீட்டு படிக்கட்டில் விளையாடிய கரடி-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் வீட்டு படிக்கட்டில் விளையாடிய கரடி- சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

நீலகிரி


கோத்தகிரி


கோத்தகிரி கடைவீதி, ரோஸ் காட்டேஜ், கன்னிகா தேவி காலனி, பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா மற்றும் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் காம்பவுண்டுக்குள் நேற்று முன் தினம் அதிகாலை 1 மணிக்கு நுழைந்த கரடி அங்குள்ள வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால், படிக்கட்டில் ஏறி, உணவு ஏதாவது கிடைக்குமா என்று தேடிப் பார்த்து மீண்டும் படிக்கட்டு வழியே இறங்கியது. சிறிது நேரம் அந்த படிக்கட்டியில் விளையாடியது. இதையடுத்து அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் உலா வந்தது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தங்களில் வெளியானதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கரடி பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.



Next Story